/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., சுவடின்றி நடந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டம்
/
அ.தி.மு.க., சுவடின்றி நடந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டம்
அ.தி.மு.க., சுவடின்றி நடந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டம்
அ.தி.மு.க., சுவடின்றி நடந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டம்
ADDED : மார் 10, 2025 06:47 AM
கோபி,: அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் நேற்று பேசினார்.
இதன்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு, கோபி, எஸ்.பி., நகர் அருகே 'எலைட் விழா' கட்டடத்தில் நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், பவானிசாகர், அந்தியூர், கோபி என மூன்று தொகுதி பொறுப்பாளர், 80 பேர் பங்கேற்றனர். வழக்கமாக அ.தி.மு.க., சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும், அதன் வழித்தடம் முழுக்க கட்சிக்கொடி, பிளக்ஸ் பேனர், மைக் செட்டில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., பாடல்கள் வரவேற்கும். ஆனால் நேற்று கூட்டம் நடந்த பகுதியில், அ.தி.மு.க., கட்சி கொடி மற்றும் பிளக்ஸ் பேனர் என எதுவும் வைக்கப்படவில்லை. கூட்டம் நடந்த தரைதளத்தில் சிறு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்களுக்கு, மொபைல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டம் நடந்த அரங்குக்குள் மீடியாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. காலை, 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம், 2:00 மணிக்கு நிறைவு பெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த எம்.எல்.ஏ., செங்கோட்டையன், காத்திருந்த மீடியாக்களிடம், ''இக்கூட்டம் குறித்த எந்த தகவல்களும், வெளியே வரக்கூடாது என எதிர்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்'' எனக்கூறி வணக்கம் தெரிவித்தார்.