/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., நிர்வாகியை வீடு புகுந்து தாக்கி அராஜகம் கொண்டையம்பாளையம் மக்கள் கொதிப்பு

ADDED : மே 05, 2024 02:05 AM
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம்
அருகே கொண்டையம்பாளையத்தில், பஞ்ச கருப்புராயன் கோவில் திருவிழா
கடந்த, 2ம் தேதி நடந்தது. அன்றிரவு இளைஞர்கள் சிலர் மக்களிடம்
தகராறில் ஈடுபட்டுள்ளனர். தட்டி கேட்டவர்களையும்
தாக்கியுள்ளனர். இதுகுறித்து டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.,
தலைவர் ராமகிருஷ்ணன், பங்களாபுதுார் போலீசாரிடம்
முறையிட்டுள்ளார்.
இதையறிந்த கும்பல் அன்றிரவு ராமகிருஷ்ணனின்
வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவர் மனைவி ரதி, உறவினர்களையும்
தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமகிருஷ்ணன், கோபி அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்நிலையில்
கொண்டயம்பாளையம் பொதுமக்கள், பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு
நேற்று சென்று, போலீசாரிடம் மனு கொடுத்தனர். அதில், 'கோவில் விழாவில்
தகராறில் ஈடுபட்டதுடன், பா.ஜ., நிர்வாகி ராமகிருஷ்ணன் வீட்டுக்குள்
புகுந்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியது அராஜக
செயல். இதில் ஈடுபட்ட இளைஞர் கும்பலை, போலீசார் கைது செய்ய வேண்டும்.
இல்லையேல் மறியல், போராட்டம் என பல்வேறு போரட்டங்களில் ஈடுபடுவோம்'
என்று தெரிவித்துள்ளனர்.