ADDED : ஆக 05, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்,
ஆடி அமாவாசையை ஒட்டி, தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு, நேற்று காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல் மாரியம்மன் கோவில், சின்ன காளியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் அமாவாசை வழிபாடுகளை கட்டியது. அமராவதி ஆற்றங்கரையில், நுாற்றுக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு, பூஜை செய்து பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்தனர்.