/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி அந்தியூர் தாலுகா அலுவலகம் முற்றுகை

ADDED : ஜூலை 12, 2024 01:38 AM
அந்தியூர், அந்தியூர் அருகே ஒட்டபாளையம் பஞ்., நல்லதம்பிகாட்டுகொட்டகை பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக வசிக்கின்றனர்.
இந்நிலையில் ஒட்டபாளையத்தில் இருந்து நல்லதம்பிகாட்டுகொட்டகைக்கு செல்லும் வண்டிப்பாதையை சிலர் ஆக்கரமித்துள்ளனர். இதை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு, அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நல்லதம்பிகாட்டுகொட்டகை பகுதி மக்கள், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தாசில்தார் கவியரசிடம் மனுவை கொடுத்தனர்.
மனுவை பெற்ற தாசில்தார், அந்த இடத்தை வந்து சர்வே செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.