/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அண்ணமார் சுவாமிகளின் வரலாற்று நிகழ்வில் நாளை படுகளம்
/
அண்ணமார் சுவாமிகளின் வரலாற்று நிகழ்வில் நாளை படுகளம்
அண்ணமார் சுவாமிகளின் வரலாற்று நிகழ்வில் நாளை படுகளம்
அண்ணமார் சுவாமிகளின் வரலாற்று நிகழ்வில் நாளை படுகளம்
ADDED : செப் 05, 2024 03:14 AM
சென்னிமலை: மண்வாசனை மாறாத, பாரம்பரிய கிராமிய கலைகளுக்கு எப்-போதும் தனி மவுசு உண்டு.
அந்த வகையில் பொன்னர்-சங்கர் வாழ்வியல் வரலாற்றை மையமாக வைத்து சென்னிமலை, மைலாடி கிராமத்தில், 56 நாட்களாக உடுக்கை பாடல் கலை-ஞர்கள் சென்னிமலை அருணாச்சலம், திருப்பூர் நாகராஜ் மற்றும் குழுவினர், பொன்னர்-சங்கர் மற்றும் தங்காள் வேடமிட்டு, உடுக்கை பாடல்களை தத்ரூபமாக பாடி வருகின்றனர்.அண்-ணமார் சுவாமிகளின் வீரவரலாற்று நிகழ்வில், தாமரை நாச்சியார் திரட்டி சீர், செல்லாண்டியம்மன் தேரோ ட்டம், தாமரை தவச-கம்பம், பொன்னர் சங்கர் பிறப்பு, திருமணவிழா, பொன்னர் சங்கர் கிளிவேட்டை என, ஒவ்வொரு நிகழ்வும் பழைய வர-லாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெற்றது. இதில், இறுதி நிகழ்வான படுகளம் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கி-ழமை) இரவு நடக்கிறது. அன்று பொன்னர், சங்கர் போருக்கு சென்று மடியும் காட்சியும், நல்லதங்காள் இறந்தவர்களை எழுப்பும் நிகழ்வும், படுகளம் பாடல்கள் மூலமாக பாடப்பட உள்ளது. படுகளம் பாட்டு மிக உருக்கமாக கண்ணீர் வடிக்கும் அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருக்கும் என, பாடல் குழுவினர் தெரிவித்தனர்.
அண்ணமார் சுவாமிகளின் வீரவரலாற்று கதையை, உடுக்கையடி பாடல் வாயிலாக தத்ரூபமாக பாடிய பாடகர்களுக்கு, விழா ஏற்-பாட்டாளர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை
செய்தனர்.