/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முறையீடு
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முறையீடு
ADDED : மே 07, 2024 02:38 AM
ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தமிழ்இன்பன் தலைமையில், மாவட்ட செயலர் பழனிசாமி ஆகியோர் மனுவை பெட்டியில் போட்டனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு கனிராவுத்தர் குளம் - பி.பெ.அக்ரஹாரம் செல்லும் சாலையில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நுாற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. அச்சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. மது பிரியர்கள் சாலை இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி, மது குடித்துவிட்டு தகராறு செய்கின்றனர். வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதால், விபத்து ஏற்படுகிறது. மாணவ, மாணவிள், பெண் தொழிலாளர்கள் இச்சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே
மதுபானக்கடையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.