/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 19, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு, இணைய தளம் மூலம் அக்., 18 ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு 2004 ஜூலை, 3 முதல், 2008 ஜன., 3 வரை பிறந்த, திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்ச்சி அல்லது, 3 ஆண்டு பட்டய படிப்பு அல்லது அதற்கு இணையான தொழில் படிப்பு பெற்றிருக்க வேண்டும். வரும் ஜூலை, 8 முதல், 28 வரை, https://agnipathvayu.cdac.in/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், அலுவலக வேலை நாட்களில் அணுகி கூடுதல் விபரம் அறியலாம். தொலைபேசி எண்: 0424 2275860ல் தொடர்பு கொண்டு அறியலாம்.