ADDED : ஆக 23, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி அலுவலர் நியமனம்
ஈரோடு, ஆக. 23-
ஈரோடு மாவட்டத்துக்கு இரண்டு கல்வி அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய கேசவ குமார், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் நீலகிரி மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய நந்தகுமார், ஈரோடு தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.