/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ADDED : மே 06, 2024 02:24 AM
ஈரோடு: ஈரோடு அருகே ஒத்தகுதிரை, ஸ்ரீவெங்கடேஸ்வரா உயர் தொழில்நுட்ப பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில், பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற, மாணவ-மாணவியருக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக ஆல்செக் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுரேந்தர் பங்கேற்றார். விழாவில் டெக் மஹிந்திரா நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி திவ்யா, ஹெக்சவேர் டெக்னாலஜிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரவீன் மாணவர்களிடம் உரையாற்றினர். விழாவுக்கு கல்லுாரி செயலாளர் கருப்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி இணை செயலாளர் கெட்டிமுத்து தலைமை உரை வழங்கினார்.
தலைவர் வெங்கடாச்சலம், அறங்காவலர் கவியரசு, முதன்மை செயல் அதிகாரி கெளதம், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பிரகதீஸ்வரன், இன்ஜினியரிங் கல்லுாரி கல்வி அதிகாரி அருன்ராஜா, கலைக் கல்லுாரி துணை முதல்வர் நஞ்சப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், 123 பொறியியல் மாணவர்கள், 113 பாலிடெக்னிக் மாணவர்கள், 367 கலை அறிவியல் மாணவர்கள், பணியாணை பெற்றனர். அதிகபட்ச சம்பளமாக, 8 லட்சம் ரூபாய், சராசரி சம்பளமாக, 3 லட்சமாக ஊதியம் பெறுகின்றனர். கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.