/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் கண்ணாடி உடைப்பு போதை வாலிபர் கைது
/
பஸ் கண்ணாடி உடைப்பு போதை வாலிபர் கைது
ADDED : ஜூன் 30, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் சென்றது. வேப்பம்பாளையம் பகுதியை கடந்து சென்றபோது, பஸ்சில் பயணித்த தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்த வெள்ளியங்கிரி, 27, குடிபோதையில் சக பயணிக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது தெரிந்தது.
இதனால் வேப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நடத்துனர் இறக்கி விட்டார். பின் பஸ் கிளம்பியது. அப்போது வெள்ளியங்கிரி கல்லை எடுத்து பஸ்சை நோக்கி வீசினார். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
சத்தம் கேட்டு பஸ்சை நிறுத்திய டிரைவர், சக பயணிகள் உதவியுடன், வெள்ளியங்கிரியை பிடித்து ஈரோடு தாலுகா போலீசில் ஒப்படைத்தார். வெள்ளியங்கிரியை போலீசார் கைது செய்தனர்.

