/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்
/
பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்
ADDED : ஆக 23, 2024 01:20 AM
ஈரோடு, ஆக. 23-
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான கலை திருவிழா போட்டி துவங்கியது.
பள்ளி மாணவ, மாணவிகளின் தனி திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டிகள் பள்ளி அளவில், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்படுகிறது. குழு போட்டிகளும் நடக்கிறது. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை நடப்பாண்டு நடத்தப்படுகிறது.
சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மைய கருவுடன் இந்தாண்டு கலை திருவிழா போட்டி நேற்று துவங்கியது. வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. அதன் பின் வட்டார அளவில் நடத்தப்படும். ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு பானை வரைதல் போட்டி நடந்தது. இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
இதேபோல் பல்வேறு அரசு, நிதியுதவி பள்ளிகளிலும் கலை திருவிழா போட்டி நடந்தது.