/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலைத்திருவிழா போட்டி பள்ளிகளில் 22ல் துவக்கம்
/
கலைத்திருவிழா போட்டி பள்ளிகளில் 22ல் துவக்கம்
ADDED : ஆக 17, 2024 04:21 AM
ஈரோடு: அரசுப்பள்ளி மாணவர்களிடம் மறைந்துள்ள திறமையை வெளிக் கொண்டு வரவும், நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கவும், பள்ளிகளில் கலை திருவிழா போட்டி இரண்டு ஆண்டாக நடத்தப்படுகிறது.
கடந்தாண்டு ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு மட்டும் போட்டி நடந்தது. இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை நடக்கிறது.
பள்ளி அளவில், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே கலையரசன், கலையரசி பட்டம், விருது வழங்கப்பட உள்ளது. இந்தாண்டில், 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற மையக்கருப்படி கலை திருவிழா போட்டி, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஐந்து பிரிவுகளாக போட்டி நடத்தப்படவுள்ளது. பள்ளி அளவிலான போட்டிகள் வரும், 22ல் துவங்க உள்ளது.