/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு உதவி
/
மனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு உதவி
ADDED : ஜூலை 19, 2024 01:42 AM
ஈரோடு: நசியனுாரில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, 100 பயனாளிகளுக்கு, 63.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கி பேசியதா-வது:
அரசின் அனைத்து திட்டங்களுக்கும், உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும், திட்டம் பற்றி மக்கள் அறி-யவும் இம்முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 214 பஞ்.,களில் 72 முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 15
துறைகளில், 44 வகையான சேவை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான மனுக்களுக்கு, 30 நாளில் தீர்வு காணப்படும். இவ்வாறு பேசினார். பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், நசியனுார் டவுன் பஞ்., தலைவர் மோகனபிரியா, துணை தலைவர் பத்மநாதன் உட்பட பலர்
பங்கேற்றனர்.