/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு அவினாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்

ADDED : ஆக 22, 2024 01:23 AM
அத்திக்கடவு அவினாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே, அத்திக்கடவு அவினாசி திட்ட குழாயில் ஏர் வால்வு வழியாக வெளியே றிய தண்ணீர் வீணாக சாலை யில் ஓடியது. 15 அடி உயரத்திற்கு பீறிட்ட தண்ணீரால் சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மோதியதில், இருவர் காயம் அடைந்தனர்.
அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம் வாயிலாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 145 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ், தண்ணீர் கொண்டு வர குழாய் பதிக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்த நிலையில், நேற்று காலை புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நம்பியூர் சாலை, தண்ணீர் பந்தல் வழியாக பதிக்கப்பட்ட குழாயில், பொருத்தப்பட்ட ஏர் வால்வு வழியாக அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஏர் வால்வு வழியாக வெளியேறிய தண்ணீர், 15 அடி உயரத்திற்கு பீறிட்டு சீறிப்பாய்ந்து சாலையில் வீணாக ஓடியது. சீறிப்பாய்ந்த தண்ணீரால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அப்போது சாலையில் சென்ற, இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் இருவர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.