/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்ட குழுவினர் முன்னாள் அமைச்சருக்கு நன்றி
/
அத்திக்கடவு திட்ட குழுவினர் முன்னாள் அமைச்சருக்கு நன்றி
அத்திக்கடவு திட்ட குழுவினர் முன்னாள் அமைச்சருக்கு நன்றி
அத்திக்கடவு திட்ட குழுவினர் முன்னாள் அமைச்சருக்கு நன்றி
ADDED : ஆக 26, 2024 08:22 AM
பெருந்துறை: அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலம் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பக் கோரும் இயக்கம் மற்றும் அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பை சார்ந்த பெரியசாமி, முருகபூபதி மற்றும் குழுவினர், முன்னாள் வருவாய் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை சந்தித்து, அத்திக்க-டவு அவினாசி திட்டம் வருவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட-தற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்ட குழு விவசாயிகள், 100 பேரை முதல்வர் ஸ்டாலினுடன் சந்திக்க வைத்து, திட்-டத்தை வேகமாக செயல்படுத்த, முதல்வரிடம் எடுத்துக் கூறுவ-தற்கு வாய்ப்பு பெற்று தந்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.கடந்த ஆட்சியில், அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்-குழு மீது போடப்பட்ட வழக்குகளை, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் சொல்லி, வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்ததற்கும், வெங்கடாசலத்துக்கு நன்றி தெரிவித்தனர்.