/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தகராறில் மகனை மீட்கும் முயற்சி:5 பேரை கத்தியால் கிழித்த தந்தை
/
தகராறில் மகனை மீட்கும் முயற்சி:5 பேரை கத்தியால் கிழித்த தந்தை
தகராறில் மகனை மீட்கும் முயற்சி:5 பேரை கத்தியால் கிழித்த தந்தை
தகராறில் மகனை மீட்கும் முயற்சி:5 பேரை கத்தியால் கிழித்த தந்தை
ADDED : ஜூலை 09, 2024 02:39 AM
ஈரோடு;ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் காலனியை சேர்ந்தவர் அசோக்குமார், 46, மாநகராட்சி துாய்மை பணியாளர். இவரின் மகன் பாரதி, 20; அதே பகுதியை சேர்ந்த இவரின் நண்பர்கள் நந்தகிஷோர், 21, நவீன், 22; பாரதி, நந்த கிஷோரிடையே கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிறகு நந்த கிஷோர், நவீன் இருவரும் பாரதியை வீட்டில் இருந்து, கிருஷ்ணம்பாளையம் காலனி பொதுக்கழிப்பிடம் அருகே அழைத்து சென்று பேசினர். ஆத்திரமடைந்த இருவரும் திடீரென பாரதியை கல், கைகளால் தாக்கினர். இதையறிந்து பாரதியின் தந்தை அசோக்குமார் சென்றார். மகனை மீட்கும் நோக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியால் (பேப்பர் கட்டர்), நந்தகிஷோர் மற்றும் நவீனை கிழித்தார். இதை தடுக்க அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், 41, விஜய், 39, சின்னச்சாமி, 43, சென்றனர். அவர்கள் தாக்க வருவதாக நினைத்து அவர்களையும் அசோக்குமார் சரமாரியாக கத்தியால் கிழித்தார். இதில் ஐந்து பேருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

