/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு
/
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு
ADDED : ஏப் 13, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி, தமிழரண் மாணவர்கள் சார்பில், 'அன்னை தமிழில் வணிக பெயர் பலகைகளை மாற்றுவோம்; எங்கும் தமிழ், எதிலும் தமிழை நிலை பெற செய்வோம்' என்ற முழக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.
ஈரோடு ஆர்.கே.வி.சாலை, கொங்காளம்மன் கோவில் வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றம் செய்ய வலியுறுத்தினர். பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், இளைஞரணி தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கடைகளின் பெயருக்கு ஏற்ப, தமிழ் பெயரை எழுதி கொடுத்து பெயர் பலகையை மாற்ற உதவி செய்தனர்.

