/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணையை பார்வையிட ஐந்தாவது ஆண்டாக தடை விதிப்பு
/
பவானிசாகர் அணையை பார்வையிட ஐந்தாவது ஆண்டாக தடை விதிப்பு
பவானிசாகர் அணையை பார்வையிட ஐந்தாவது ஆண்டாக தடை விதிப்பு
பவானிசாகர் அணையை பார்வையிட ஐந்தாவது ஆண்டாக தடை விதிப்பு
ADDED : ஜூலை 31, 2024 12:43 AM
புன்செய் புளியம்பட்டி,:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை, ஆண்டுதோறும் ஆடி, 18ம் தேதி மட்டும் மக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து, பவானிசாகர் அணை மீது சென்று, அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவர்.
நடப்பாண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த, 2020 முதல், 2022 வரை மூன்று ஆண்டுகள் பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது ஆண்டாக நடப்பாண்டும் அணை பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
91 அடியை எட்டிய நீர்மட்டம்
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்வதால், அணைக்கு நீர்ரவத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம், 89 அடியாக நீர்மட்டம், நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில், 2 அடி உயர்ந்து, 91 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து, 15 ஆயிரம் கன அடி, நீர்மட்டம், 91.28 அடி; நீர் இருப்பு, 22.4 டி.எம்.சி.,யாக இருந்தது.