நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் : டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம், பகவதி நகர், புதுதோட்டத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ், 63; ஒன்றரை ஏக்கர் நிலத்தில், நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார்.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று முன் இரவு தோட்டத்துக்குள் புகுந்த ஒரு யானை, 150க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. இதேபோல் அதே பகுதியில் தெய்வசிகாமணி, வேலன், சங்கர் ஆகியோர் நிலங்களிலும் பயிர்களை சேதம் செய்துள்ளது. அந்தியூர் வனத்துறையினர், விவசாய நிலத்துக்குள் மீண்டும் யானை புகாதவாறு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

