ADDED : ஜூன் 10, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே முள்ளிபுரம், எழுந்தகாட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 59; தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் முள்ளிபுரத்தில், துரைசாமி என்பவர் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தென்னை மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கொட்டின. துரைசாமியையும் தேனீ கடித்துள்ளது.
இருவருக்கும் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த முருகேசன் இறந்தார் இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.