ADDED : மே 24, 2024 10:15 PM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை
நீர்ப்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில்
தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லுார்
அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பவானிசாகர் அணைக்கு
நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு, 7,698 கன அடி நீர் வரத்தானது.
இதனால், 48 அடியாக இருந்த நீர்மட்டம், 52 அடியாக உயர்ந்தது. அதாவது அணை
நீர்மட்டம் நேற்று முன்தினம், 48 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால்
ஒரே நாளில், 4 அடி உயர்ந்து விட்டது. அணை நீர் இருப்பு, 4.8
டி.எம்.சி.,யாக இருந்தது. கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீர்
திறக்கப்பட்டிருந்தது. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாசன
பகுதி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணை நீர்மட்டம்
ஒரே நாளில் 4 அடி உயர்வு
24.5.24/புன்செய்புளியம்பட்டி/எஸ்.தங்கராஜ்/73977-50981/5:30
24.5.24/சேலம் எடிட் 1/வேல்முருகன்/872/7.30

