/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
70 ஆண்டுகளில் முதல்முறை பவானிசாகர் நீர்வரத்து சரிவு
/
70 ஆண்டுகளில் முதல்முறை பவானிசாகர் நீர்வரத்து சரிவு
70 ஆண்டுகளில் முதல்முறை பவானிசாகர் நீர்வரத்து சரிவு
70 ஆண்டுகளில் முதல்முறை பவானிசாகர் நீர்வரத்து சரிவு
ADDED : மார் 07, 2025 01:27 AM
பவானிசாகர்:பவானிசாகர் அணை நீர்வரத்து நேற்று, 31 கன அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று அணை நீர்வரத்து வினாடிக்கு, 31 கன அடியாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி 108 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது
நேற்று அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்காக, 3,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 85.58 அடி, நீர் இருப்பு, 18.8 டி.எம்.சி.,யாக இருந்தது. பவானிசாகர் அணையின், 70 ஆண்டு கால வரலாற்றில், நடப்பாண்டு தான் கோடை சீசனில், முதன் முறையாக நீர்வரத்து, 31 கன அடியாக சரிந்துள்ளது என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.