/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்வரத்து 6,719 கன அடியாக சரிவு
/
பவானிசாகர் நீர்வரத்து 6,719 கன அடியாக சரிவு
ADDED : ஜூலை 22, 2024 11:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில், தென்மேற்கு பருவமழை ஒரு வாரமாக கொட்டியது.
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 70 அடியில் இருந்து, 83 அடியாக உயர்ந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று முன்தினம், 10 ஆயிரத்து, 373 கன அடியாக இருந்த நீர்வரத்து, 6,719 கன அடியாக நேற்று குறைந்தது. நேற்று அணை நீர்மட்டம், 83.76 அடி; நீர் இருப்பு, 17.7 டி.எம்.சி.,யாக இருந்தது.