/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
ADDED : ஜூலை 31, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபரை, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜ்குமார், 21, கூலி தொழிலாளி. இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து, 1098 சைல்டு லைன் அலுவலர்கள், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்ட பிரிவு மற்றும் போக்சோ பிரிவின் கீழ், ராஜ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.