/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போர்வெல் தண்ணீரை பரிசோதிக்கும் மாநகராட்சி
/
போர்வெல் தண்ணீரை பரிசோதிக்கும் மாநகராட்சி
ADDED : ஜூன் 19, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:குடிநீரில் கழிவுநீர் கலந்து அடுத்தடுத்து ஏற்படும் உயிரிழப்பால், ஈரோடு மாநகராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பகுதியில் உள்ள 1,646 போர்வெல் தண்ணீரையும் பரிசோதித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'நிலத்தடி நீரில் கழிவுநீர் கலக்கிறதா என்பதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது' என்றனர்.

