ADDED : ஏப் 23, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து, யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, திண்ணையூரை சேர்ந்த விவசாயி பெருமாள் தன் வீட்டின் முன் மாடுகளை கட்டி இருந்தார். வனப்பகுதியில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒற்றை யானை, அங்கு கட்டியிருந்த காளை மாட்டை தாக்கியதில் அது இறந்தது. சம்பவ இடத்திற்கு, சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இறந்த காளை மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

