/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வணிகவியல் பள்ளிகள் சங்க பேரவை கூட்டம்
/
வணிகவியல் பள்ளிகள் சங்க பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 17, 2024 02:27 AM
ஈரோடு;தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பேரவை கூட்டம், முப்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில ஆலோசகர் ரவிசந்திரன், மாவட்ட பொருளாளர் வெங்கிடகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். கடந்த ஜூனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட 'கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்' தேர்வு, இதுவரை நடத்தப்படவில்லை. அரசு பணியில் உள்ள அலுவலர்களுக்கு தகுதி காண் காலத்துக்குள் பெற வேண்டிய அவசியம் உள்ளதால், உடனடியாக தேர்வு அறிவிப்பை இயக்குனரகம் வெளியிட வேண்டும்.
கடந்த, 2019, 2020, 2021 தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு மெரிட் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு மாவட்ட வணிகவியல் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.