ADDED : பிப் 22, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க வங்கி மூலம் கடன் பெறலாம். இதில், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். தொழில்களுக்கு வழங்கப்படும்
தொகையில், 30 சதவீதம் மூல-தன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்-களும், பயன் பெறலாம். விருப்பமுள்ளோர், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவகத்தை நேரில் அல்லது, 0424 2263227 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரி - exwelerd@tn.gov.in லும் பயன் பெறலாம்.