/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பார்வையற்றோருக்கு பஸ் பாஸ் பெற முகாம்
/
பார்வையற்றோருக்கு பஸ் பாஸ் பெற முகாம்
ADDED : மார் 12, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டுக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், இலவச பஸ் பாஸ் புதுப்பிக்க வரும், 19 மற்றும் 20ல் காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். முகாமுக்கு வரும்போது ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான மூன்று போட்டோ எடுத்து வர வேண்டும்.