/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் அதிகரிக்கும் கேன்சர்; ஈரோடு எம்.பி., அச்சம்
/
மாவட்டத்தில் அதிகரிக்கும் கேன்சர்; ஈரோடு எம்.பி., அச்சம்
மாவட்டத்தில் அதிகரிக்கும் கேன்சர்; ஈரோடு எம்.பி., அச்சம்
மாவட்டத்தில் அதிகரிக்கும் கேன்சர்; ஈரோடு எம்.பி., அச்சம்
ADDED : ஆக 31, 2024 01:06 AM
ஈரோடு: ''கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஈரோடு வாழ தகுதியற்ற மாவட்டமாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது,'' என்று, பிரகாஷ் எம்.பி., வேதனையுடன் கூறினார்.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக, பிரகாஷ் எம்.பி., பங்கேற்றார். கவுன்சி-லர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டத்தில்தான், கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிக-ரித்து வருகிறது.
என்னிடம் மருத்துவ பரிந்துரைக்காக வந்த, 60 பேரில், 40 பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் இரண்டு வயது குழந்தையும் உள்ளது. கேன்சர் நோய் பாதிப்பை உண்டாக்கும் பிளாஸ்டிக் கழிவு, யூஸ் அன்த்ரோ கப்
உள்ளிட்டவைகளை, எங்-களை விட உங்களால்தான் (அதிகாரிகள்) தடுக்க முடியும். அதை தடுப்பதற்கான அதிகாரமும் உங்களிடம்தான் இருக்கிறது. கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஈரோடு வாழ
தகுதியற்ற மாவட்டமாக மாறி விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.
திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளால், பிளாஸ்டிக் கப் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை
எடுக்க வேண்டும். இது-போன்ற விவகாரங்களில் கட்சி தலையிடாது. அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
மாநகராட்சியில் நிதி நெருக்கடியால், வளர்ச்சி திட்டங்கள் மேற்-கொள்வதில் பிரச்னை இருக்கிறது. ஓராண்டாக பல்வேறு திட்-டப்பணிகளில் சுணக்கம் இருக்கிறது. சாலைப் பணிகள் மட்டும் தேவையான அளவில் உள்ளது.
மாநகராட்சியில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஈரோடு ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட பிறகு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்-ளது. ஆனால், அத்தொகையை சிறப்பாக பயன்படுத்தவில்லை.
எதிர் வரும் காலங்களிலாவது, மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்ப-ணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் ஒத்து-ழைத்தால் மட்டுமே, 2026 தேர்தலின் போது, கவுன்சிலர்கள் வார்-டுகளுக்குள் செல்ல முடியும்.
இவ்வாறு எம்.பி., பேசினார்.