/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மீது வழக்கு
/
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மீது வழக்கு
ADDED : ஜூன் 24, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த, 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை கண்டித்து, சூரம்பட்டி நால்ரோட்டில் தடையை மீறி, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மகளிரணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் முதல்வர் உருவ பொம்மையை பாடை கட்டி துாக்கி வந்தனர். இதனால் தடையை மீறிய, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுமதியின்றி பொது இடத்தில் ஒன்று கூடுவது, போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என மூன்று பிரிவுகளில், தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட, 200 பேர் மீது, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.