ADDED : செப் 10, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : கோபி, பொலவகாளிபாளையத்தில் செயல்பட்டு வரும், கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ௬ம் தேதி ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத, 1.30 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ரேகா கூறும்போது, ''மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.