/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
/
புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
ADDED : ஆக 30, 2024 01:02 AM
புன்செய்புளியம்பட்டி, ஆக. 30-
புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை, ஒரு கோடி ரூபாய்க்கு விற்றது.
புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச்
செல்கின்றனர்.
நேற்று, 20 எருமை, 250 கலப்பின மாடு, 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகள், 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமைகள், 20 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22 ஆயிரம் முதல், 48 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23 ஆயிரம் ரூபாய் முதல் 53 ஆயிரம் ரூபாய், சிந்து மாடு, 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40 ஆயிரம் முதல் 74 ஆயிரம் ரூபாய், வளர்ப்பு கன்றுகள், 6,000 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. அதேபோல் ஆட்டுக்குட்டி, 3,௦௦௦ ரூபாய் முதல் 4,௦௦௦ ரூபாய்; வெள்ளாடுகள், 6,௦௦௦ ரூபாய் முதல், 18 ஆயிரம் ரூபாய்; செம்மறியாடுகள், 5,௦௦௦ ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை, ஒரு கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள்
தெரிவித்தனர்.
* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 22,000
ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 23,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் கால்நடை வாங்கி சென்றனர். மொத்தம், 90 சதவீத மாடுகள்
விற்றன.