/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம்
/
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம்
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம்
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம்
ADDED : செப் 16, 2024 03:00 AM
ஈரோடு: அரசின் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், வனப்பகுதியான ஆசனுாரில் சோலார் இயந்திரம் மூலம், சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம் செயல்பட்டு, பழங்குடியினர் குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இதுபற்றி ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி என ஐந்து தாலுகாக்களில், 77 பஞ்.,களில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு தொழில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தாளவாடி தாலுகா ஆசனுார் பஞ்.,ல் கோட்டாடை மலை கிராமத்தில், 7.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சூரிய மின் ஆற்றல் மூலம் இயங்கும் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் செயல்படுகிறது. இதில் கொள்கலன் வடிவில் சிறு தானிய கல், மண் பிரிக்கும் இயந்திரம், பாலீஸ் செய்யும் இயந்திரம், சிறு தானிய மாவு ஆக்கக்கூடிய இயந்திரம் சூரிய மின்னாற்றலில் இயங்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இயந்திரங்களும் தினமும், 200 கிலோ வீதம் அரைக்கும் திறன் கொண்டதாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

