/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்தி விழா கோலாகலம் மாநகரில் 134 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
சதுர்த்தி விழா கோலாகலம் மாநகரில் 134 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
சதுர்த்தி விழா கோலாகலம் மாநகரில் 134 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
சதுர்த்தி விழா கோலாகலம் மாநகரில் 134 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : செப் 08, 2024 01:01 AM
-நிருபர் குழு-
விநாயகர் சதுர்த்தி விழா ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில், வழக்கமான உற்சாகத்துடன், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி, இந்து அமைப்புகள், மக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஈரோடு மாவட்டத்தில், 1,557 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் மாநகரான ஈரோட்டில் மட்டும், ௧௩௪ சிலைகள் அமைத்து பூஜை நடந்தது.
இந்து முன்னணி சார்பில் ஈரோடு சம்பத் நகரில், 36ம் ஆண்டாக, 10 அடி உயர வீர விநாயகர் கணபதி ஹோமத்துக்கு பின் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருங்கல்பாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, 10 அடி உயர ஆஞ்சநேய விநாயகர், மாணிக்கம்பாளையம் காந்தி நகரில், ஒன்பது அடி உயர செல்வ விநாயகர், பெரிய வலசு சுப்பிரமணி நகரில், ஒன்பது அடி உயர கோமாதா விநாயகர், அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் அருகே, ஒன்பது அடி உயர கருட விநாயகர், கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஒன்பது அடி உயர, வெற்றி விநாயகர் சிலை அமைத்தனர். இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாவட்ட தலைவர் ஜெகதீசன், பொது செயலாளர் சங்கர், மாவட்ட பொது செயலாளர் கார்த்தி , மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டி நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்த, 48 இடங்களில் சிலைகள் கரைக்கப்படவுள்ளன.
கோபியில்...
கோபி அருகே வேலுமணி நகர், சக்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை கணபதி ேஹாமம் நடந்தது. அதையடுத்து மூலவருக்கு, 108 குட பாலிபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல் பச்சைமலை பாத விநாயகர் மற்றும் வித்யா கணபதிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடந்தது. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும்
அலங்காரம் நடந்தது.
150 விநாயகர் சிலை
புன்செய்புளியம்பட்டி நகரம் மற்றும் பவானிசாகர் ஒன்றிய பகுதிகளில், 80க்கும் மேற்பட்ட கிராமங்களில், இந்து முன்னணி மற்றும் மக்கள் சார்பில் மூன்றடி முதல் 1௧ அடி வரை, ௧௫௦ விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. 11ல் அனைத்து விநாயகர் சிலைகளும் நால்ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பவானிசாகர் அடுத்த,பகுடுதுறை-பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
புன்செய்புளியம்பட்டி ஓங்கார பிள்ளையார், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், சக்தி விநாயகர், அரசமரத்தடி விநாயகர், முத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், பூஜை நடந்தது.
அந்தியூரில்...
அந்தியூர் போலீஸ் ஸடேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 17 விநாயகர் சிலைகள், பர்கூரில், 10 சிலைகள், ஆப்பக்கூடலில், 18 சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்து அன்னதானம் வழங்கி மக்கள் வழிபட்டனர். இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்ட பவானி ஆற்றங்கரை பகுதியில் இன்று மாலை விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
சத்தியில்....
சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், 80 சிலைகள், மக்கள் சார்பில், 50க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட்டு, வழிபாடு நடந்தது. இந்த சிலைகள் நாளை மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கபடுகிறது. இந்து முன்னணி சார்பில், சத்தி, பவானீஸ்வரர் கோவில் அருகில், 11 அடி உயர ஆதி கருடாழ்வ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த பிரமாண்ட விநாயகர் சிலையை, ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டனர்.