/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி
/
சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி
சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி
சென்னிமலை கொங்கு மெட்ரிக் 38வது ஆண்டாக 100 சத தேர்ச்சி
ADDED : மே 08, 2024 02:27 AM
சென்னிமலை:சென்னிமலை
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு
எழுதிய, 161 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி தித்திகா,
587 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி சியாமளா வள்ளி, 586
எடுத்து இரண்டாமிடம்; மாணவி சுதர்சனா, 585 எடுத்து மூன்றாமிடம்
பெற்றனர். கடந்த, 38 ஆண்டுகளாக இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்று
சாதனை படைத்து வருகிறது. பள்ளியில், 550 மதிப்பெண்களுக்கு மேல்
நான்கு பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் ஐந்து பேரும், 560
மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 21
பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 61 பேரும் பெற்றுள்ளனர்.
கணினி
அறிவியலில், 15 பேர் சென்டம்; கணினி பயன்பாட்டில் ஆறு பேர்;
வணிகவியலில் ஐந்து பேர்; கணிதத்தில் மூன்று பேர்; புவியியல் பாடத்தில்
மூன்று பேர்; கணக்கு பதிவியலில் இருவர்; வேதியியல் பாடத்தில் ஒருவரும்
நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த
மாணவ, மாணவியர், இதற்கு காரணமான ஆசிரியர்களை, பள்ளி முதல்வர் முத்து
கருப்பன், பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, தாளாளர் மணி, பொருளாளர்
தங்கமுத்து மற்றும் நிர்வாக குழுவினர், பரிசுக்கோப்பை வழங்கி
பாராட்டி, வாழ்த்தினர்.

