/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 24, 2024 08:17 AM
பவானி : பவானி யூனியன் புன்னம், ஒரிச்சேரி மற்றும் வைரமங்கலம் பஞ்., மக்களுக்கான, மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம், தளவாய்பேட்டையில் நேற்று நடந்தது. பவானி தாசில்தார் தியா-கராஜ் தலைமை வகித்தார். பவானி யூனியன் சேர்மன் பூங்-கோதை வரதராஜ், ஜம்பை பேரூராட்சி தலைவர் ஆனந்தகுமார், பஞ்., தலைவர்கள் சென்னம்மாள், சித்ரா, அருக்காணி முன்-னிலை வகித்தனர். துணை ஆட்சியர் அம்சவேணி தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார்.
இதில் வருவாய், மின்வாரியம், ஊரக வளர்ச்சி, காவல் துறை உட்பட, 19 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வாரிசு, சாதி, வருமானச் சான்றிதழ் உட்பட, 740 கோரிக்கை மனு பெறப்பட்டது. இதில், 127 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது துறை ரீதியான விசார-ணைக்கு பின், 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்-படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.