/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர்; த.மா.கா., கேள்வி
/
கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர்; த.மா.கா., கேள்வி
கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர்; த.மா.கா., கேள்வி
கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர்; த.மா.கா., கேள்வி
ADDED : ஜூன் 24, 2024 02:59 AM
ஈரோடு;த.மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமை அக்கட்சி இளைஞரணி தலைவர் யுவராஜா தொடங்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவம் போலீசாரின் அலட்சிய போக்கை காட்டுகிறது. முறையாக கள்ளசாராயத்தை அழித்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்காது. அதேசமயம் சம்பவம் நடந்த இடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பிறகு முதலமைச்சர் வந்து விளக்கம் அளிக்கிறார். ஏன் எதிர்க்கட்சி பேச அனுமதி அளிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் குறை கூறுகிறார். வரும் சட்டசபை தேர்தலில், இதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.