ADDED : செப் 10, 2024 07:30 AM
காங்கேயம் : சென்னை, கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன், 33; இவரின் மனைவி யோகபிரியா, 31; இவர்களின் மகன் யஸ்வந்த ராஜ், 4; ஹரிஹரன் தாய் புஷ்பா, 55; நான்கு பேரும் தங்கைக்கு திருமண வரன் பார்க்க, கோயம்புத்துாருக்கு நிசான் காரில் வந்தனர். கோவையிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை திரும்பினர். ஹரிஹரன் காரை ஓட்டினார்.வெள்ளகோவில் அருகே வெள்ளமடை பகுதியில், எதிரே வந்த டாடா தேஸ்த் வேன், கார் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
படுகாயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே யஸ்வந்த ராஜா இறந்து விட்டான். மற்ற மூவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தோஸ்த் வாகனத்தில் வந்த டிரைவர் உள்பட நான்கு பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.