/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை விழா கொடியேற்றம்
/
மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை விழா கொடியேற்றம்
ADDED : ஏப் 15, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது.
முன்னதாக தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி மகுடேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. இதையடுத்து மேள தாளம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பிறகு வீரநாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. புத்தாண்டால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

