ADDED : செப் 04, 2024 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை கிராம பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா, நேற்று ஆய்வு செய்தார். பெருந்துறை அரசு நடுநிலைப் பள்ளியில், 46.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டடப்பணி, பெருந்துறையில் செயல்படும் அறிவுசார் மையத்தை பார்வை-யிட்டு ஆய்வு மேற்கொண்டார். நுாலகத்தில் பயில வரும், மாணவ, மாணவியர் வருகை குறித்து கேட்டறிந்தார்.
பெருந்துறை டவுன் பஞ்., ஜீவா நகரில், பாதாள சாக்கடையுடன் வீட்டு கழிவு நீர் குழாய்களை இணைக்கும் பணி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கட்டட புனர-மைப்பு பணியை பார்வையிட்டார்.பெருந்துறை சிலேட்டர் நகரில் பிற்படுத்தப்-பட்டோர் மாணவர் விடுதி, விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்-கொண்டார்.