நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்,மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தாராபுரத்தில் அமராவதி சிலை ரவுண்டானா அருகே, இந்திய கம்யூ., கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, சி.பி.ஐ.,- எம்., இடைக்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் உள்பட இரு கம்யூ., கட்சிகளையும் சேர்ந்த, 60 பெண்கள் உள்பட, 120க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.