/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
/
ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்
ADDED : ஆக 05, 2024 01:57 AM
புன்செய் புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகராட்சி தோட்ட சாலை பகுதியை சேர்ந்தவர் கரிவரதராஜன். புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், இவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில் நடக்கும் அவலங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று, மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். என்னுடைய மொபைல் எண்ணுக்கு, பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் குறித்து வந்த வாட்ஸ் ஆப் தகவலை, ஸ்டேட்டஸாக வைத்திருந்தேன்.
இதைப்பார்த்த சுந்தரம், 15க்கும் மேற்பட்டோருடன் என் வீட்டுக்கு வந்தார். இதுபோல் ஸ்டேட்டஸ் வைக்க கூடாது என்று மிரட்டினார். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. சுந்தரம், அவருடன் வந்த பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.