/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி வார்டன் மீது புகார்
/
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி வார்டன் மீது புகார்
ADDED : ஜூலை 09, 2024 02:33 AM
ஈரோடு,;கோபி தாலுகா திட்டமலை பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்த பி.ஏ., (தமிழ்), மூன்றாமாண்டு மாணவி கவுசல்யா, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: திட்டமலை பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவியர் விடுதியில் தங்கி, அரசு கலை அறிவியல் படித்து வருகிறேன். விடுதி வார்டனான புவனா, டீ வாங்கி வர செய்தல் உட்பட தேவையற்ற பணிகளில் மாணவியரை ஈடுபடுத்துகிறார். தவிர ஒழுங்கீனமான செயல் நடக்கிறது. இதை சுட்டிக்காட்ட போட்டோ எடுத்ததால், என்னை போல மூன்று மாணவியரை விடுதியில் இருந்து வெளியேற்றி விட்டார்.
விடுதியில் அதிகபட்சம், 25 பேர் தங்கவே இடம் உள்ளது. ஆனால், 100 மாணவியர் வரை தங்கி வந்தோம். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அங்கு நடக்கும் ஒழுங்கீனத்தை தடுக்க வேண்டும். விடுதியில் இருந்து வெளியேற்றிய மாணவியரை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.