/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிவு துணிகளை அரைக்கும் ஆலை மீது புகார்
/
கழிவு துணிகளை அரைக்கும் ஆலை மீது புகார்
ADDED : ஆக 14, 2024 01:39 AM
ஈரோடு: சித்தோடு அருகே பெருமாபாளையம், ராசி நகரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறிய-தாவது:
சித்தோடு - கவுந்தப்பாடி சாலையில், பெருமாபாளையம் ராசி நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 400க்கும் மேற்-பட்டோர் வசிக்கிறோம்.
இப்பகுதியில் தனியார் காட்டன் மில் செயல்படுகிறது. துணி, நுால் சாயம் கலந்த துணிகள், டெக்ஸ்டைல் கழிவுகளை பல்-வேறு மாவட்டங்களில் இருந்து மில்லுக்கு வாங்கி வருகின்றனர். இங்கு அரைத்து, பஞ்சாக மாற்றுகின்றனர்.
துணி கழிவுகளை அரைக்கும்போது கடும் துர்நாற்றம் ஏற்படுகி-றது. கழிவு துாசி காற்றில் பறந்து வருவதால், சுவாச பிரச்னை, மூச்சு திணறல், அரிப்பு ஏற்படுகிறது. வீட்டிலும் உணவு, தண்ணீர் போன்றவற்றில் துாசி படிகிறது.
மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பிரச்-னைக்கு தீர்வு காண வேண்டும். அல்லது ஆலையை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

