/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் புகார் மனு

ADDED : ஆக 08, 2024 01:38 AM
கோபி, கோபி நகராட்சி கூட்ட அரங்கில், நேற்று நடந்த அவசர கூட்டத்தில், பெண் துப்புரவு மேற்பார்வையாளர் மீது, 12வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சுமையா பானு, சேர்மன் நாகராஜிடம்
(தி.மு.க.,) புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய, 12வது வார்டில் துப்புரவு பணிக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவி என்பவர் தன் பணிகளை சரிவர செய்வதில்லை. இது சம்பந்தமாக துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் வரை, வாய்மொழியாக புகார் செய்துள்ளேன். பணிக்கு வரும் ஒப்பந்த பணியாளர்களிடம், உங்கள் கவுன்சிலருக்கு இன்னும் இரு ஆண்டுகள் தான் 'பவர்' இருக்கிறது. அதன்பின் அவர் எங்களிடம் தான் வந்தாக வேண்டும் என மிரட்டல் விடுக்கிறார்.
கவுன்சிலர் குறித்து, பொது வெளியில் பணியாளர்களிடம், அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். எங்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களிடம் அவர் எவ்வாறு அணுகுவார். மேலும், பொய்யான வருகை பதிவேடு மூலம், நகராட்சி நிர்வாக பணியில், அவர் முறைகேடு செய்துள்ளார். எனவே இந்த காரணங்களுக்காக, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.