/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் சாலை அமைக்கும் பணி தரமின்றி அவசர கதியில் நடப்பதாக புகார்
/
சென்னிமலையில் சாலை அமைக்கும் பணி தரமின்றி அவசர கதியில் நடப்பதாக புகார்
சென்னிமலையில் சாலை அமைக்கும் பணி தரமின்றி அவசர கதியில் நடப்பதாக புகார்
சென்னிமலையில் சாலை அமைக்கும் பணி தரமின்றி அவசர கதியில் நடப்பதாக புகார்
ADDED : மார் 29, 2024 01:51 AM
சென்னிமலை:நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னிமலை பேரூராட்சி பகுதியில் நான்கு ராஜவீதிகள் மற்றும் ஊத்துக்குளி ரோடு, ஈரோடு ரோடு, காங்கேயம் ரோடு பகுதிகளில், தற்போது அவசர கதியில், இரவு பலகலாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால், தரமின்றி நடப்பதாக, ஈரோடு கலெக்டர் உட்பட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, பல்வேறு தரப்பில் இருந்து புகார் மனு சென்றுள்ளது.
புகார் மனுவில் மக்கள் கூறியிருப்பதாவது: புதியதாக சாலை அமைத்தால், மில்லிங் செய்ய வேண்டும். இந்நிலையில் சென்னிமலையில் சென்னிமலை பிராட்டியம்மன் கோவில் அருகில் இருந்து, பெருந்துறை-ஈங்கூர் சாலையில் மார்க்கெட் அருகில் உள்ள வேகத்தடை வரை, மில்லிங் செய்யப்படாமல், நேற்று முன்தினம் சாலை அமைத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் இதில் ஈடுபட்டுள்ளனர். யாருக்காக, எதற்காக அவசர கதியில் இந்த சாலை அமைக்கப்படுகிறது? என்பதும் தெரியவில்லை. இரவு-பகலாக புழுதி பறக்க நடக்கும் பணியால், மக்கள் சாலைகளில் நடமாடுவதே சவாலாக மாறியுள்ளது.
தேர்தல் விதிமீறலில் இதெல்லாம் வராதா? என்பதை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

