ADDED : ஏப் 04, 2024 04:31 AM
ஈரோடு: பெருந்துறை அருகே, கொம்மங்கோவில் அருகே மினிடோர் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். மினிடோர் வேனை பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்தார். அப்போது, பெருந்துறை ஆர்.எஸ்.,ல் இருந்து பெருந்துறைக்கு பழனிசாமி என்பவரது அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். 26 கிலோ எடை கொண்ட, 9 மூட்டை, 75 கிலோ எடை கொண்ட, 10 மூட்டை என, 3,090 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.
* தாராபுரத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு ஈரோடு வழியாக, மற்றொரு மினிடோர் வேனில், 6 பேர் சேர்ந்து தங்கள் வீட்டின் தேவைக்காக கொண்டு சென்ற, 75 கிலோ எடை கொண்ட அரிசி, 45 மூட்டை, 26 கிலோ எடை கொண்ட அரிசி, 20 மூட்டை என, 3,900 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.
* ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது, 270 வேட்டியை, அவரிடம் வேலை செய்யும் கிரிதாரி பிரசாத் என்பவர் டெம்போ வேனில் முனிசிபல் காலனிக்கு எடுத்து சென்றார். கடையில் விற்பனையாகாததால், குடோனில் வைப்பதற்காக எடுத்து சென்றபோது, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த வேட்டிகளின் மதிப்பு, 72,000 ரூபாய்.

