ADDED : மே 20, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் மூக்கையன், 47, கட்டட தொழிலாளி. இவர் ஈரோட்டை சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியின் தாய், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மூக்கையன் மீது போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

