/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்செய் புளியம்பட்டி பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு..
/
புன்செய் புளியம்பட்டி பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு..
புன்செய் புளியம்பட்டி பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு..
புன்செய் புளியம்பட்டி பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு..
ADDED : மே 16, 2024 04:25 AM
பு.புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பகுதியில் வெயில் அதிகரித்துள்ளதால் கொத்தமல்லிக்கு நல்ல விலை இருந்தும், விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து வருகின்றனர். கொத்தமல்லி நடவு செய்த, 50 நாட்களில் விளைச்சலுக்கு வந்துவிடும். மழை அதிகம் இருந்தால் அழுகி பாதிப்பு ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் வளர்ச்சி குறைந்து கருகிவிடும். தற்போது, இப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கொத்தமல்லி வளர்ச்சி இல்லாமல் உள்ளது. பல இடங்களில் கொத்தமல்லி நாற்றுக்கள், நீரின்றி கருகியுள்ளன. கடந்த மாதம் கொத்தமல்லி ஒரு கட்டு, 10 முதல் 15 ரூபாயாக இருந்தது. தற்போது விளைச்சல் இல்லாத நிலையில், 20 முதல் 25 ரூபாய் வரை விலை போகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கொத்தமல்லி வளர்ச்சி அடையாமல் கருகி வருகின்றன. கடந்த ஆண்டு கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இல்லை. தற்போது, கொத்தமல்லிக்கு நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லை,' என்றனர்.